மதம் மாற்ற சுற்றுச்சுவர் பிரச்சனையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மூலம் தீர்வு காணப்படும் என மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் உறுதி
மதம் மாற மறுத்தவர்களின் வழியை மறித்து சுற்றுச் சுவர் எழுப்பிய பாதிரியார், நேரில் சென்று ஆய்வு செய்த பாஜக மாவட்டத் தலைவர், பிரச்சனைக்கு தீர்வு காண ஆர்டிஓ தலைமையில் சமாதானப் பேச்சுக்கு ஏற்பாடு
திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி கிராமத்தில் மதம் மாற மறுத்ததால் பொது வழியை மறித்து சுற்றுச்சுவர் எழுப்புவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆலோசனையின் பெயரில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் R.ஜீவானந்தம் மற்றும் பாஜக குழுவினர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னர் பொதுமக்களின் கருத்துக்களை மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் கேட்டறிந்தார். பின்னர் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் அனுப்பி வைத்து இந்தப் பிரச்சனைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும் என்று பொதுமக்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிலையில் கிறிஸ்தவ மற்றும் இந்து ஆதிதிராவிடர் இருதரப்பினருக்கும் இடையே நடைபாதையில் நடந்து செல்வது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் காவல்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நாளை இருதரப்பினரையும் அழைத்து ஆர்டிஓ தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மாவட்டத் தலைவர் ஆய்வு செய்ய வந்தபோது மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட பாஜக மகளிரணி செயலாளர் ஷோபா ஜான் ரூபன், மீண்டும் 2வது முறையாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள R.ஜீவானந்தம் அவர்களை வரவேற்று, பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து வாழ்த்தினார்.
மேலும் மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன்,ஒன்றிய தலைவர் பழனி, நகர தலைவர் திருமாறன், நகர பொதுச் செயலாளர் செந்தில்வேல், ஒன்றிய மகளிரணி செயலாளர் வள்ளி, ஓபிசி அணி நகர செயலாளர் ஸ்ரீதர், நகர பொருளாளர் சரவணன், ஒன்றிய பொதுச் செயலாளர் யுவராஜ், முருகன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.





அரசாங்கம் இந்த ஆசீரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகிறோம்
ReplyDeleteஇந்த ஆசீரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுகிறோம்
ReplyDelete