திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடை தரகர்களின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவதை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் உண்மையான விவசாயிகளிடம் முறையாக நெல் கொள்முதல் செய்யாமல், பெரிய நெல் வியாபாரிகள் மூலமாக நெல் கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் கொள்முதல் நிலைய ஊழியர்கள் நடக்கும் போக்கை கண்டித்தும்,விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூல் செய்யும் ஊழியர்களை கண்டித்தும் திருவண்ணாமலை தெற்கு பாஜக சார்பில்
இன்று காலை நாயுடுமங்கலம் கூட் ரோடு சந்திப்பில் பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜன் மற்றும் விவசாய அணி மாநில செயலாளர் ராஜேஷ் குருசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் R.ஜீவானந்தம்,மாவட்ட பார்வையாளர் மற்றும் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன்,
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் பகுதியில் உள்ள 8 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாமல் ஆளும் கட்சியை சேர்ந்த இடைத்தரகர்களை வைத்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் ஒரு கிலோவிற்கு 1.50 காசு வீதம் மூட்டைக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூல் செய்கிறார்கள்.
மத்திய அரசு நெல்லுக்கு ஒரு கிலோவிற்கு 19 ரூபாய் வழங்குகிறது, ஆனால் மாநில அரசு அதைக்கூட விவசாயிகளுக்கு வழங்குவதில்லை, இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவிக்க உள்ளோம், அதையும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இந்த ஆர்பாட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் S.P.K.சுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ், ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் சந்தோஷ் பரமசிவம்,
மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன்,நகர தலைவர் திருமாறன், பொருளாளர் சரவணன், ஓபிசி அணி பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், மாவட்ட எஸ்.டி அணித்தலைவர் பழனி, துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் பழனி, பொதுச் செயலாளர்கள், மணிகண்டன், சக்திவேல், யுவராஜன்,
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அருணகிரி, அறிவுசார் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ரகுநாதன், எஸ்சி அணி ஒன்றியத் தலைவர் ஏழுமலை, மாவட்ட மருத்துவ அணி தலைவர் மருத்துவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன்,
மாவட்ட செயலாளர்கள், ராஜலட்சுமி, மெட்டில் ராணி,மகளிர் அணி தலைவர் சந்திரா, மலர்கொடி விவசாய அணி ஒன்றிய தலைவர் ஜெயபால், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர்கள் ஹரிஹரன், அருள், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.









Comments
Post a Comment