மாற்றுத்திறனாளி ராமசாமி குடும்பத்தினரை கொலைவெறியுடன் தாக்கி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச விடாமல் பயிரை நாசம் செய்து மின்மோட்டார் உடைத்த பன்னீர்செல்வம் கூட்டாளிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தொண்டமானூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமசாமி குடும்பத்தினரை கொலைவெறியுடன் தாக்கி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச விடாமல் பயிரை நாசம் செய்து மின்மோட்டார் உடைத்த பன்னீர்செல்வம் கூட்டாளிகள். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளவுள்ளதாக கண்ணீருடன் மனு.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தொண்டமானூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமசாமி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச விடாமல் பயிரை நாசம் செய்து மின்மோட்டார் உடைத்துவிட்டு அவரது குடும்பத்தினரை தாக்கி கொலை மிரட்டல் விடுக்கும் பன்னீர்செல்வம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தொண்டமானூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளி ராமசாமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
மாற்றுத்திறனாளி ராமசாமி அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியும் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
தொண்டமானூர் கிராமத்தில் ராமசாமி அவர்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது அந்த நிலத்தில் பயிர் செய்து வாழ்ந்து வருகிறார்.
பக்கத்து நிலத்தை சேர்ந்த தொப்புளாண் மகன் பன்னீர்செல்வம், பரசுராமன், அஜித்குமார், தயாளன், மல்லிகா, ஏழுமலை சக்திவேல் உள்ளிட்டோர் மாற்றுத்திறனாளி ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை காழ்ப்புணர்ச்சி காரணமாக அடிக்கடி கடந்த ஆறு மாத காலமாக தகராறில் ஈடுபட்டு மாற்றுத்திறனாளி ராமசாமியை பலமுறை தாக்கியுள்ளனர்.
இதனை வீடியோ எடுத்த அவரது மகன் மற்றும் மகள் களையும் கொலை மிரட்டல் விடுத்து செல்போனை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் அவரது கிணற்றில் உள்ள மின் மோட்டார் பைப் லைன் மாட்டுக் கொட்டகை உள்ளிட்டவற்றையும் உடைத்து அவரது குடும்பத்தினர் வாழ வழி இல்லாத வகையில் அவரை துன்புறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வாணாபுரம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்துப் பேசி கொள்ளுமாறு தெரிவித்தனர்.
காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எனது குடும்பம் மற்றும் என் உயிரின் பாதுகாப்புக்காக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பாதுகாப்பு கேட்டு புகார் மனு கொடுத்துள்ளோம்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து எனது குடும்பத்தாருக்கும் எனக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு தீக்குளித்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளவுள்ளதாக கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்துள்ளார்.



Comments
Post a Comment