திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாஜக எஸ்சி அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் அவர்களை RSS இமாலய பரிவார் மாநில செயலாளராக மானீன்ய இந்தரேஷ் குமார் அவர்கள் அறிவித்தார்.
சென்னையில் தேசிய பாதுகாப்பு முகமை நடத்திய 7வது பொதுக்குழு கூட்டத்தில் ஐநா சபை மூத்த ஆலோசகர் டாக்டர் S.வெங்கட்ராமன் மற்றும் RSS மூத்த தலைவரான மானீன்ய இந்தரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாஜக எஸ்சி அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் அவர்களை RSS இமாலய பரிவார் மாநில செயலாளராக மானீன்ய இந்தரேஷ் குமார் அவர்கள் அறிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற 7வது பொதுக்குழு கூட்டத்தில் ஐநா சபை மூத்த ஆலோசகர் டாக்டர் எஸ்.வெங்கட்ராமன் மற்றும் ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரான மானீன்ய இந்திரேஷ் குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பரிவார் இயக்க செயல் வீரர்களுக்கு வழங்கினர்.
7வது பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பரிவார் அமைப்புகள் பொறுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் புதிதாக அறிவிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக எஸ்சி அணி மாவட்ட தலைவராக விஜயராஜ் அவர்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்.
எனவே விஜயராஜ் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பேரியக்கத்தின் கூடுதல் பொறுப்பாக சிறப்பாக பணியாற்றிட ஆர்எஸ்எஸ் இமாலய பரிவார் மாநில செயலாளராக விஜயராஜ் அவர்களை இந்திரேஷ் குமார் அவர்கள் அறிவித்து வாழ்த்தினார்.



Comments
Post a Comment