திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடை தரகர்களின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவதை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் உண்மையான விவசாயிகளிடம் முறையாக நெல் கொள்முதல் செய்யாமல், பெரிய நெல் வியாபாரிகள் மூலமாக நெல் கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் கொள்முதல் நிலைய ஊழியர்கள் நடக்கும் போக்கை கண்டித்தும்,விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூல் செய்யும் ஊழியர்களை கண்டித்தும் திருவண்ணாமலை தெற்கு பாஜக சார்பில் இன்று காலை நாயுடுமங்கலம் கூட் ரோடு சந்திப்பில் பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜன் மற்றும் விவசாய அணி மாநில செயலாளர் ராஜேஷ் குருசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவ...