அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
திருவண்ணாமலை ரவுண்டானா அருகே திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் விஜயராஜ் தலைமையில் அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பாஜகவினர் சட்ட மாமேதை அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை ரவுண்டானா அருகே அண்ணல் அம்பேத்கர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் மலர்தூவி அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ்குமார், நகர தலைவர் திருமாறன், நகர பொதுச் செயலாளர் செந்தில்வேல், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி முன்னாள் தலைவர் மலர்கொடி, மகளிர் அணி பொதுச் செயலாளர் தமயந்தி, மகளிர் அணி தலைவர் சந்திரா, கௌதமி, எஸ்.சி அணி மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன்,
புதிதாக கட்சியில் இணைந்துள்ள பாலு, உதயகுமார், கதிரவன், எஸ்.டி அணி மாவட்ட தலைவர் பழனி உள்ளிட்ட ஏராளமான பாஜகவினரும், பொதுமக்களும் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.




Comments
Post a Comment