யோகா உலக சாதனை நிகழ்த்தி கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற ஹனீஷ்குமார் மற்றும் தர்ஷன் ஆகியோருக்கு நகராட்சி ஆணையர் வாழ்த்து தெரிவித்தார்.
யோகாசன விழிப்புணர்வு உலக சாதனைக்காக கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற உலக சாதனையாளர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன், டாக்டர் யமுனா ஹரிகோவிந்தன் தம்பதியரின் மகன்கள் ஹனீஷ்குமார் மற்றும் தர்ஷன் ஆகியோருக்கு திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
திருவண்ணாமலை வடஆண்டாபட்டு பைபாஸ் சாலையில் உள்ள தீபமலை மருத்துவமனை மற்றும் தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கத்தின் தலைவரும், உலக சாதனையாளருமான டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன், டாக்டர் யமுனா ஹரிகோவிந்தன் தம்பதியரின் மகன்கள் ஹனீஷ்குமார், தர்ஷன் ஆகியோர் விழிப்புணர்வு யோகாசனம் செய்து உலக சாதனையாளர் சான்று பெற்றுள்ளனர்.
மேலும் அவர்கள் சிறுவயதில் சாதனை படைத்தற்காக கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளனர்.
Comments
Post a Comment