நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுக்கு பத்மாசனம் செய்த உலக சாதனையாளர்கள்.
100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி பத்மாசனம், அடுக்கு பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்கள் மூலம் உலக சாதனையாளர்கள் டாக்டர் ஹ.ஹனிஷ்குமார் டாக்டர் ஹ.தர்ஷன் ஆகியோர் தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கத்தின் நிறுவனரும், உலக சாதனையாளருமான டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் தலைமையில் விழிப்புணர்வு.
திருவண்ணாமலை வடஆண்டாபட்டு பைபாஸ் சாலையில் உள்ள தீபமலை மருத்துவமனை வளாகத்தில், தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கம் மற்றும் தீபமலை மெடிக்கல் இன்ஸ்டிடியூட் இணைந்து 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஓட்டுரிமை உள்ள அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பத்மாசனம், அடுக்கு பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்கள் மூலம் உலக சாதனையாளர்கள் டாக்டர் ஹ.ஹனிஷ்குமார் டாக்டர் ஹ.தர்ஷன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கத்தின் நிறுவனரும், உலக சாதனையாளருமான டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் தலைமை தாங்கினார்.
வட ஆண்டாபட்டு ஊராட்சி மன்றத் தலைவரும், வழக்கறிஞருமான மோகன், யோகா பயிற்சியாளர் சுரேஷ், பிரபாகரன், அருணகிரிநாதன், சிலம்பரசன், மற்றும் சித்த மருத்துவர் டாக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
உலக சாதனையாளர் மற்றும் தொழிலதிபர் தங்கவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி பரிசு வழங்கி பாராட்டினார்.
நிஷா, முனியம்மாள், சிலம்பரசன், காந்தி, ஷ்யாமளா, ஷோபனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து மகளிருக்கும் சேலை இலவசமாக வழங்கப்பட்டது.
தீபமலை மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டின் முதல்வர் டாக்டர் யமுனா ஹரிகோவிந்தன் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் சிவாலயா நன்றி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பல்வேறு விருதுகள் பெற்ற உலக சாதனையாளர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் சிறப்பான முறையில் செய்து இருந்தார்.
சமூக மாற்றத்திற்காகவும், பொது மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யவும் தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உலக சாதனையாளர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் நடத்தி வருவது பாராட்டுக்குரியது என்று அனைத்து தரப்பு மக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment