தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் மாட்டுவண்டியில் சென்று நூதன முறையில் மனித சங்கிலி போராட்டம்
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் அருகே தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட பாஜகவினர் மாட்டுவண்டியில் சென்று நூதன முறையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி சார்பாக பெட்ரோல், டீசல் வாட் வரியை குறைக்க வேண்டி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மனித சங்கிலி போராட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் டாக்டர் சுந்தர்ராஜன், வடக்கு மாவட்டம் ஓபிசி அணி தலைவர் நித்தியானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம், வடக்கு மாவட்ட தலைவர் சாசா வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ் ரமேஷ், சேகர், நகர தலைவர் திருமாறன் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.ஓபிசி அணி மாவட்ட செயலாளர் செந்தில்வேல்,ஓபிசி அணி நகர தலைவர் ஸ்ரீதர், ஓபிசி அணி மாவட்ட பொதுச்செயலாளர் யுவராஜ், மகளிர் அணி துணைத் தலைவர் ராஜதமயந்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் மாலதி, மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரா மற்றும் பிஜேபி நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட பாஜகவினர் 500-க்கும் மேற்பட்டோர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
Comments
Post a Comment