திருவண்ணாமலை ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜக மாவட்ட துணைத்தலைவர் கவிதா பிரதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, மாவட்ட துணைத்தலைவர் கவிதா பிரதீஷ்குமார் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை நகர 25வது வார்டில் போட்டியிடுவதற்கு விருப்பமனுவை மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் விஜயன் உள்ளிட்டவர்களிடம் வழங்கினார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் பிரதீஷ்குமார், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொன்மலர் மற்றும் நகர தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பாஜகவினர் உடனிருந்தனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் சிறப்பான செயல்பாடுகளாலும், கவிதா பிரதீஷ்குமார் தனது திருவண்ணாமலை 25வது வார்டில் பாஜக சார்பில் சிறப்பாக பணியாற்றி வருவதாலும் கவிதா பிரதீஷ்குமார் அவர்களுக்கு பாஜகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பொதுமக்களிடையே நல்ல கருத்து நிலவி வருகிறது.
Thank you
ReplyDelete