இளங்குண்ணி ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல், மழையில் நனைந்தபடி காலையிலேயே விறுவிறுப்பாக வாக்களித்த வாக்காளர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இளங்குண்ணி ஊராட்சியில் ஆண், பெண் வாக்காளர்கள் என சுமார் 3000 வாக்காளர்கள் உள்ளனர்.
ஏற்கனவே பதவி வகித்த தங்கம்மாள் என்பவர் இறந்ததை அடுத்து அப்பதவி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இடைத் தேர்தலில் ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் தேன்மொழி அண்ணாமலை என்பவரும், பூட்டு சாவி சின்னத்தில் முருகம்மாள் குணபால் என இருமுனைப் போட்டியாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் மழையில் நனைந்தபடியும் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமேலழகன் மற்றும் ரபிக் ஆகியோர் வாக்கு மையங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இளங்குன்னி பகுதி பதற்றமான பகுதி என்பதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செல்வராசு தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென இளங்குன்னி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Comments
Post a Comment