3ம் ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் விசேஷ ஹோமம், ரத்ததானம், தடுப்பு ஊசி மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது
திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் மூன்றாமாண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை ஒட்டி உலக நன்மைக்காக விசேஷ திரவிய ஹோமம் நடத்தப்பட்டது.
மேலும் ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக 30க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
அத்துடன் திருவண்ணாமலை மாவட்டம், சே.கூடலூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
கரோனாவை தடுப்பதற்காக கரோனாவை தடுப்பூசியும் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் ஜீவரத்தினம், மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
மாவட்ட அமைப்பாளர் நீலகண்டன், மாவட்ட துணைத்தலைவர் சங்கர் ராஜா, நகர தலைவர் அன்பு, நகர அமைப்பாளர் செல்வம், நகர துணைத் தலைவர் பலராமன் உள்ளிட்ட பலர் விஸ்வகர்மா மூன்றாம் ஆண்டு ஜெயந்தி விழா விசேஷ திரவிய ஹோமம், ரத்ததான முகாம் மற்றும் மரம் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment