செங்கம் தனியார் மண்டபத்தில் வடகிழக்கு பருவமழை பேரிடர் முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட கிராம ஊராட்சி இணை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்ட கிராம ஊராட்சி இணை இயக்குனர் தலைமையில் வருகின்ற வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கம் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மீட்பு பணி எவ்வாறு எதிர் கொள்ளப்பட வேண்டும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மழைகாலத்தின் போது பாதிக்கப்படுபவர்களை பாதுகாப்பது எப்படி என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தற்போதைய கரோனா பேரிடர் காலத்தில் தடுப்பூசி கட்டாயம் செலுத்துவது குறித்து அரசு அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கிராம நிர்வாகத்தினர் அப்பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் செங்கம் வட்டாட்சியர் மனோகன், பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
செங்கம் செய்தியாளர் S.குகன்
Comments
Post a Comment