ஆன்மீக வழிபாட்டுத் ஸ்தலங்களை வாரம் மூன்று நாட்கள் மூடும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்பு.
திருவண்ணாமலை நகரின் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் நான்கு மாட வீதியில் உள்ள திருவூடல் தெருவில் பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை தங்குதடையின்றி திறந்துவைத்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஆன்மீக விரோத திமுக அரசு கொரோனா பரவலைக் காரணம் காட்டி வார விடுமுறை நாட்களில் வழிபாட்டுத் ஸ்தளங்களில் தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ளதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது,
கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு திமுக -வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆன்மீக விரோத போக்கை கடைபிடிக்கும் திமுக அரசை கண்டித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அவர்கள் பேசுகையில், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் திருவண்ணாமலை நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மூடுவதற்கு உத்தரவிட்டு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்காமல் கோவிலை மூடி வைத்து விட்டு கரோனா நோய் தொற்று பரவலை காரணம் காட்டி டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்து வருவது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்த கரு.நாகராஜன் கூறுகையில், இந்து கோயில்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரின் ஆலயங்களையும் திறக்க வேண்டும் என்றும், அதே போன்று தமிழகத்தில் அனைத்து துறைகலும் தற்போது இயங்கிவரும் நிலையில், இந்து கோயில்களை மட்டும் வாரத்தில் மூன்று நாள் மூடுவது இந்துக்களின் உரிமையை திமுக அரசு பரிப்பதாகவும், ஏசி பஸ்ஸில் 50 பேர் செல்லும் போது கரோனா நோய் தொற்று பரவாதா? என்றும், திமுக அரசு கோயில்களை மூடுவதில் மட்டும் பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்றார்.
மேலும் தமிழகத்தில் குற்றங்களை தடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கு பிடிவாதம் பிடிக்க வேண்டிய அரசு கோயில்களை மூடுவதற்கு பிடிவாதம் செய்யக்கூடாது. பக்தர்களின் மனவேதனையை புண்படுத்தும் திமுக அரசுக்கு கேடு காலம் என்று காட்டமாக தெரிவித்தார்.
Comments
Post a Comment