திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் நல சங்கம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஜவ்வாதுமலை ஒன்றியம் கோவிலூர் ஊராட்சி, அத்திப்பட்டு கிராமத்தில் மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு ஆங்கில வழி கல்வி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியை தொடங்கி தற்போது வரை செயல்பட்டு வருகிறது .
இந்த பள்ளியில் தற்போது 420 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர் .மலைவாழ் மக்களின் பிள்ளைகள் 100சதவீதம் கல்வியில் வளர்ச்சி பெறுவதற்கும் ,உயர்கல்வி பெறுவதற்கும் அத்திப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளியை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யக்கூடாது.
மேலும் இந்த பள்ளிக்கு நிரந்தர கட்டிட வசதி ஏற்படுத்தி ஜவ்வாதுமலையில் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment