திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு, கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்.
![]() |
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாஜக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்றுக்கொண்டு மாணவர்களை சேர்ப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாஜக தலைவர் ஜீவானந்தம் தலைமை ஏற்று கண்டன உரையாற்றினார்.
அப்போது கல்லூரி மாணவர் சேர்க்கை முறையாக நடத்தப்பட வேண்டும், தொடர்ந்து இதுபோன்ற மாணவர்களிடம் முறைகேடான முறையில் பணம் பெற்று சேர்க்கை நடைபெறுமானால் மாநில பாஜக இளைஞரணி தலைவர் தலைமையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கல்லூரி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.
மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் முறைகேட்டில் ஈடுபடாமல் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் திமுக அரசு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனால் சிறிது நேரம் கல்லூரி முன்பு பரபரப்பு காணப்பட்டது.

Comments
Post a Comment