வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க ஒத்திகை விழிப்புணர்வு பயிற்சி தீயணைப்பு வீரர்களால் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் விழிப்புணர்வு போலி ஒத்திகை நடந்தது.
வட்டாட்சியர் சுபாஷ்சந்தர் முன்னிலை வகித்தார், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமை தாங்கினார்.
இந்த போலி ஒத்திகை விழிப்புணர்வில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தற்போது வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் புயல், வெள்ளப் பாதிப்பு இடர்பாடுகளில் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பே பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அங்கே இருக்கும் பொருட்களான லாரி டியூப், வாழை மரம், வாட்டர் கேன் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு தப்பித்துக்கொள்ளலாம்.
மிக அவசர தேவைக்காக தீயணைப்பு மற்றும் மீட்பு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 101, 112 ஆகியவை தொடர்புக் கொள்ளலாம் என்றும் வருவாய் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தடுப்பது குறித்து போலி ஒத்திகை பயிற்சி நடத்தி காட்டப்பட்டது.
இதில் திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி, ஆரணி தீயணைப்பு நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், சமூகநல தாசில்தார் பாலாஜி, துணை தாசில்தார்கள் குமரேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment