4 மாத நிலுவை சம்பளம் கேட்டு கொசு ஒழிப்பு பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் டெங்கு மஸ்தூர் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு ரூ.326 வீதம் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 4 மாதமாக இவர்களுக்கு வழங்கப்படவேண்டிய சம்பள நிலுவை தொகையினையும் மற்றும் கரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்தமைக்கு தமிழக அரசால் வழங்க வேண்டிய ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படாமல் உள்ளதை வழங்க வேண்டும் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமேலழகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நான்கு மாத காலமாக சம்பளம் வழங்காததால் தங்கள் குடும்பம் பெரும் வறுமையில் வாடுவதாகவும், சம்பள நிலுவைத் தொகை மற்றும் ஊக்கத்தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Comments
Post a Comment