அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படுகாயமடைந்த நபரை செங்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, பின்னர் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய செங்கம் காவல்துறையினர், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments
Post a Comment