திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வணிகர்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மாநாட்டு மண்டல தொடக்கவிழா , சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கும் விழா ,கரோனா தடுப்பூசி முகாம் ஆகிய முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
மாநாட்டுக்கு மண்டலத் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்பச் செயலாளர் மதன் மோகன், வேலூர் மாவட்ட பொதுச்செயலாளர் சோமசுந்தரம் , திருவண்ணாமலை நகர தலைவர் அண்ணாமலை , போளூர் தொகுதி தலைவர் சுரேஷ் ,திருவண்ணாமலை தொகுதி தலைவர் மனோகரன், தொகுதி செயலாளர் பவனேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
திருவண்ணாமலை மாவட்ட தலைவர் க.சா .முருகன் வரவேற்று பேசினார். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் பிச்சாண்டி , அரசு வக்கீல் சீனுவாசன், வணிகர்களின் சங்கமம் நிறுவனத் தலைவர்
என். செந்தில்குமார் ஆகியோர் கலந்துகண்டு சிறப்புரையாற்றினர் .
ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமலதா டேனியல் வாழ்த்தி பேசினார்.
மாநாட்டில் வணிகர்களின் சங்கமம் நிறுவனத்தலைவர் செந்தில்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:-
உற்பத்தி தொழில் நிறுவனங்கள் இரட்டை விலை முறையை கடைபிடித்து வருகின்றன. அவர்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு விலையும் ,உள்நாட்டு வியாபாரிகளுக்கு ஒரு விலையும் நிர்ணயம் செய்து உற்பத்தி பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றனர் .அந்த விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்படுகிறது. எனவே இந்த இரட்டை விலை முறையை உற்பத்தி தொழில் நிறுவனங்கள் கைவிட்டு ஒரே விலையை நிர்ணயம் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் நல வாரியத்தில் அதிகளவில் வியாபாரிகள் சேர்ந்து பயனடையும் வகையில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
வணிகர்களின் சங்கமம் உறுப்பினர் சேர்க்கை 1 கோடியை எட்டும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வியாபாரிகள் நலம் காப்பது எங்கள் பணியாக இருக்கும் .
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment