திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை, பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வெகுவாக உயரத் தொடங்கி உள்ளன.
குறிப்பாக செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மண்மலை, தோக்கவாடி, துக்காப்பேட்டை, மேல்செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திடீரென கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் தொடர்ந்து பெய்யும் மழையால் சம்பா நெல் சாகுபடி சிறப்பாக இருக்கும் எனவும் இதனால் எதிர்வரும் பொங்கல் சிறப்பாக விவசாயிகளுக்கு இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மேலும் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது எனவும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Comments
Post a Comment