திருவண்ணாமலையில் மராட்டிய சங்க தலைவர், துணைத் தலைவர், செயலாளர் பதவி ஏற்பு
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி மராட்டிய சங்கம் சார்பாக மராட்டிய சங்க தலைவர், துணைத் தலைவர், செயலாளர் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மராட்டிய சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் மற்றும் சங்க ஆலோசகர்கள் பதவிகள் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.
இச்சங்கம் தமிழகம் முழுவதும் உள்ள மராட்டிய உறுப்பினர்களுக்கு மட்டுமே வெவ்வேறு வியாபாரத்தில் தொழில் செய்து வரும் உறுப்பினர்களின் இன்னல்களையும், துயரத்தையும் போக்க இந்த சங்கம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
மாநிலத் தலைவர் பல்வந்த், துணைத் தலைவர்கள் உத்தம், சஜன், தத்தாத்ரே, செயலாளர் ஜிதேந்தர், துணைச் செயலாளர்கள் ரமேஷ், கபில், பொருளாளர் ஜெய்தீப், சங்க ஆலோசகர்கள் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment