பிரதமர் மோடி 71வது பிறந்தநாள், தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் நடத்தும் மருத்துவ அணித் தலைவர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன்
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள் முன்னிட்டு ஆரணி கொசப்பாளையம் ஆதிபகவன் நர்சரி பள்ளியில் பா.ஜ.க. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறுபான்மை அணி வடக்கு மாவட்ட தலைவர் இடிமின்னல் தங்கராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு இரத்தகொதிப்பு, சர்க்கரை பராசோதனை செய்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் இராஜா ஹரிகோவிந்தன் அவர்கள் பாரதப்பிரதமர் மோடி அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நகர மருத்துவ அணி தலைவர் டாக்டர் ரஜேஸ், தெற்கு மாவட்ட செயலாளர் தங்கவேலு, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மதிவானன், அறிவுசார் பிரிவு மாவட்ட தலைவர் அருணகிரி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நகர பா.ஜ.க தலைவர் புவனேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலமேலு, நகர ராணுவ பிரிவு தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் சவுந்தரராஜன், சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் தேவகுமார், மாவட்ட சிறுபான்மை அணி பொருளாளர் தர்மராஜ், சிறுபான்மை அணி மாவட்ட பொது செயலாளர் சுதர்சனன், பொன்னப்பன், இளையபெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment