பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மருத்துவ அணி சார்பில் இலவச மருத்துவ முகாம்.
திருவண்ணாமலை வடஆண்டாபட்டு பைபாஸ் சாலையில் உள்ள தீபமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவ அணியின் சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு , பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நோய்நொடியின்றி பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்ந்து பாரத தேசத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக இன்று மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் உடல் பரிசோதனை செய்து, அதற்கான சிகிச்சை இலவசமாக பெற்றனர். மேலும் மருந்துகள் அனைத்தும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவ அணி சார்பில் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவர் அணி துணைத் தலைவர் திருமதி சத்யா தேவி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மதிவாணன், நகர தலைவர் டாக்டர் ராஜேஷ், நகர துணைத்தலைவர் சிவகுரு, மாவட்ட அறிவுசார் அணித்தலைவர் அருணகிரிநாதன், மருத்துவ அணி வடக்கு ஒன்றிய தலைவர் வெங்கடேசன், வடக்கு மாவட்டம் சிறுபான்மை அணி தலைவர் தங்கராஜ், வட அண்டபட்டு கிளைத் தலைவர் முனியம்மாள் மற்றும் நிஷா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பாஜக நிகழ்ச்சிகளை சிறப்பாக பாஜக மாவட்ட மருத்துவ அணித் தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் அவர்கள் செய்து வருவதாகவும் பாஜக அணி பிரிவுகளில் சிறப்பான அணியாக மருத்துவர் அணி செயலாற்றி வருவதாகவும் அனைவரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment