திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் ஊராட்சியில் உள்ள 11வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைதேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் குல்ஜார்பி சர்தார்கான் அவர்களை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அம்மாபாளையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூடியிருந்த திரளான மக்களிடையே பேசியபோது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் தான் நல்லாட்சி நடைபெறும் எனவும், தற்போது தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் முதல்வர் சூரியன், நாடாளுமன்ற உறுப்பினர் சூரியன், சட்டமன்ற உறுப்பினர் சூரியன், ஒன்றியக்குழு தலைவர் சூரியன், ஊராட்சிமன்ற தலைவர்கள் சூரியன் என்று உள்ளது.
அதேபோல் தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒன்றிய கவுன்சிலரும் சூரியனாக வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில் இத்தொகுதியில் உள்ள கோவில் மாதிமங்கலத்தில் கலைக் கல்லூரியை வழங்கி மாணவ மாணவியர்கள் பயன்வகையில் ஏற்படுத்தி தந்துள்ளது திமுக அரசு தான். எனவே இங்கும் திமுக வெற்றி பெற்று வந்தால்தான் நல்லாட்சி மலரும் என கூறி வாக்கு சேகரித்து பேசினார்.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் பங்குபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment