செங்கம் அருகே நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வெற்றி.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையம் ஒன்றியத்தில் காலியாக இருந்த 11வது வார்டு கவுன்சிலர் பதவி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு திமுக சார்பில் குல்ஜார் பீ என்பவரும் அதிமுக சார்பில் செல்வி என்பவரும் நாம் தமிழர் கட்சி சார்பில் கவிதா மற்றும் சுயேட்சையாக நதியா ஆகியோர் போட்டியிட்டனர்.
கடந்த 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எண்ணப்பட்டது.
இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட குல்ஜார் பீ 1046 வாக்குகளும் - அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வி 1478 வாக்குகளும் பெற்று 432 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றதற்க்கான சான்றிதழை அதிமுக வேட்பாளர் செல்வியிடம் தேர்தல் அதிகாரி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் புதுப்பாளையம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Comments
Post a Comment