1075 கரோனா தடுப்பூசி பெரு முகாம், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நாளை (10-10-2021) ஞாயிற்றுக்கிழமை, 1075 தடுப்பூசி பெரு முகாம்களில் கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா பெரும்தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பேராயுதமாக தடுப்பூசி மட்டுமே உள்ளதால் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே நாம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசின் முயற்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருந்து மாவட்டத்தில் 100% கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற நிலையினை விரைவில் அடைய பொதுமக்கள் அனைவரும் உதவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment