Skip to main content

Posts

Showing posts from April, 2025

ஒரு ரூபாய்க்கு ஹேர் கட்டிங், 5ம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு சிறப்பு சலுகை

  திருவண்ணாமலை நகரின் திருவள்ளுவர் சிலை அருகே சுகம் மருத்துவமனை எதிரில் அருணை பழமுதிர் நிலையம் மேல் மாடியில் புதுப்பொலிவுடன் உதயமாகிறது குரூமிங் வேர்ல்ட் என்கிற குடும்பத்திற்கான சலூன் கடை. குரூமிங் வேர்ல்ட் குடும்ப சலூன் கடையில் ஹேர் கட்டிங், சேவிங், திருமண பெண் மற்றும் மாப்பிள்ளை அலங்காரம், மெஹந்தி, ஹேர் கலரிங், ஹேர் ஸ்டைல், சேன்ஜ் ஆப் ஹேர் ஸ்டைல், சேன்ஜ் ஆப் பியர்ட், ஷாம்பு கண்டிஷனிங்,  ஹேர் வாஷ், ஹேர் ஸ்ட்ரைட்னிங், ஸ்மூத்தனிங், கெரட்டின், புரோட்டின் டெபாசிட், பெண்களுக்கு பல்வேறு ஹேர் ஸ்டைல்ஸ், பேசியல், ஐ ப்ரோ, ஸ்கின் ட்ரீட்மென்ட்,   பெடிக்யூர், மெனிக்யூர், பூட் மசாஜ், ஐ மசாஜ், ஹீல் பீல் பாத வெடிப்பு ட்ரீட்மென்ட், வலி இல்லாமல் காது மற்றும் மூக்கு குத்துதல் கன் ஷாட், டீ டேன், பிக்மென்டேஷன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தரமான முறையில், குறைந்த செலவில் பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9698880999 7373748411  வியாழக்கிழமை 01-05-2025 ஒரு நாள் மட்டும் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு முதலில் வரும் 50 வாடிக்கையாளர்களுக்கு ஒரே ரூபாயில் அனைத்து விதமான ஹேர் கட்டிங்,...

அர்ஜுன் சம்பத்துக்கு பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு

  திருவண்ணாமலை அருணை மாநகருக்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அர்ஜுன் சம்பத் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். அவருக்கு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சார்பில் மலர் மாலை அணிவித்து கோயில் பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில், அதிமுக பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். பெகல்காமில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீவிர நடவடிக்கையின் மூலம் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பார்கள். திருப்பதி போல் வளர்ந்து வரும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நீர்மோர், தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். முதியோர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தனி வர...

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தொரப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்து அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் அருள் பெற்றனர். முன்னதாக நேற்று மங்கள இசை, மகா கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பிரவேசம், கோபுர கலசங்கள் நிறுவுதல், முதற்கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று காலை மங்கள இசையுடன் முதற்கடவுள் பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு விசேஷ ஹோமங்கள், நாடி சந்தானம், பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலய விமான கலசம் மீது புனித நீர் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி தரிசனம் செய்து வழிபட்ட...

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் பேச்சு

  திருவண்ணாமலை அடுத்த சு.வாளவெட்டி கிராமத்தில் திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாமக மாவட்டச் செயலாளர் பக்தவச்சலம், வன்னியர் சங்க செயலாளர் நாராயணசாமி, ஜெயக்குமார், கனல் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்டச் செயலாளர் பக்தவச்சலம் பேசுகையில் கூறியதாவது, பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து திரளான தொண்டர்களை தங்கள் குடும்பத்துடன் அழைத்து வர வேண்டும். வருபவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் ஆகியவை முன்னேற்பாடு செய்து கொள்ள வேண்டும், பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களை முன்னதாகவே புக்கிங் செய்து கொள்ள வேண்டும் , கடைசி நேரத்தில் சென்றால் வாடகை அதிகரிக்கக்கூடும் வாகனங்களும் கிடைப்பதற்கு சிரமம் ஏற்படும் என்று மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தனது உரையின்போது நிர்வாகிகளுக்கு ஆலோசனையாக வழங்கினார்.  ஒன்றிய தலைவர் தமிழ்வாணன், ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன், மீசைக்காரர் குப்பன...