27 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய மகாபாரத சொற்பொழிவு மற்றும் துரியோதனன் படுகளம் வெகு விமரிசையாக நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள்யை சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், கூத்தலவாடி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத சொற்பொழிவு கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இன்று காலை துரியோதனன் படுகளம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 18 நாட்களாக பாண்டவர் கௌரவர் பிறந்த வரலாறு, தகாதன செய்த பகாசுரன் வதம், கிருஷ்ணன் தூது, அபிமன்யு செய்த அசகாய போர் என்கின்ற பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. கடந்த 7 நாட்களாக இரவுகளில் அர்ஜுனன் வில்வளைப்பு, ராஜ சுய யாகம், கர்ணன் மோட்சம், பதினெட்டாம் போர் உள்ளிட்ட தெருக்கூத்து நாடகமும் 7 நாட்கள் இரவில் நடைபெற்று வந்தது. மேலும் பகலில் மகா பாரத சொற்பொழிவு மற்றும் இரவு நேரங்களில் மகாபாரத கதையில் வரும் தெருக்கூத்து நாடகங்கள் என தினந்தோறும் விழா நடைபெற்று வந்தது. இரவு நேரங்களில் சாமி வீதி உலா வந்து திரௌபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் அக்னி வசந்த விழாவின் முக்கிய நாளான இன்று 18ம் நாளை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து பாஞ்சாலி சபதம் நிகழ்வையும் துரியோதனனை வதம் ...