தனது 48 வது பிறந்தநாளை அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய மாநகராட்சி உறுப்பினர் B.சந்திரபிரகாஷ் MC
திருவண்ணாமலை மாநகராட்சியின் 16வது வார்டு அதிமுக வட்டக் கழகச் செயலாளரும், திருவண்ணாமலை மாநகராட்சி நகர மன்ற உறுப்பினருமான பி. சந்திரபிரகாஷ் MC அவர்களின் 48வது பிறந்தநாள் விழா இன்று பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள ஸ்ரீ தேரடி முனீஸ்வரன் கோயில் முன்பு ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்பு கேசரி, வெஜிடபிள் சாதம், சிப்ஸ் மற்றும் வாட்டர் பாட்டில் உள்ளிட்டவை அன்னதானம் வழங்கப்பட்டது. வேட்டி, சட்டை, சேலை, தாம்பூல தட்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் ஸ்ரீ தேரடி முனீஸ்வரர் கோயில் முன்பு ஏராளமான பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து மதியம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பான முறையில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டது.