வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த எஸ்ஐ, புகார் மனுவுக்கு நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முற்றுகை
திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் மத்தளாங்குள தெருவில் வசித்து வரும் மகாலிங்கம் என்ற வழக்கறிஞர் மீது கொலை மிரட்டல் விடுத்த ஓய்வு பெற்ற எஸ்ஐ தனபால் குறித்து புகார் மனு அளித்தும் குற்றச்சாட்டப் பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மத்தளாங்குள தெருவில் வசித்து வரும் வழக்கறிஞர் மகாலிங்கம் ஓய்வு பெற்ற எஸ் ஐ தனபால் என்பவர் மாதவி என்பவர் மீது தொடுத்த வழக்கிற்கு எதிராக வாதாடி வருகிறார் இதனால் அந்த வழக்கில் ஓய்வு பெற்ற எஸ்ஐ தோல்வி அடையும் சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதால் வழக்கறிஞர் மகாலிங்கத்திற்கு மிரட்டல் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்து அந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மகாலிங்கம் அளித்த புகாருக்கு காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வழக்கறிஞர்களுக்கு பாது...