Skip to main content

Posts

Showing posts from February, 2024

சின்ன கோட்டங்கள் கிராமத்தில் அமைந்துள்ளஅருள்மிகு கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் உட்பட்ட மதுரா சின்ன கோட்டங்கள்கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீகெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம். ஊராட்சி மன்ற தலைவர் இரா. முருகன் தலைமையில்.வெகுவிமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கெங்கையம்மனை வழிபட்டனர்.. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை கணபதி முருகர் . ஹோமம் . கோ பூஜை செய்யப்பட்டு நான்காம் கால பூஜைகள் செய்து பூர்ணாகி. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீரை சிவச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வழிபாடு செய்து கோவில் மேல் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.   கெங்கையம்மன் கோவில் புணரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் அருகே மூன்று யாக சாலைகள் அமைப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் முன்னிலையில் ஸ்ரீ கெங்கையம்மனுக்கு கலசாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து பூ அலங்காரத்தால் பூஜையை வைக்கப்பட்டு மற்றும் தீபார...

சந்தானம் சிலம்பம் அகாடமி நிறுவனர் ஆசான் ச.சரவணனுக்கு வீரவாள் மற்றும் மகா குரு துரோணாச்சார்யா விருது

சங்கராபுரத்தில் உள்ள தாவாப்பிள்ளை  திருமண மண்டபத்தில்  தேசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2500 கராத்தே மாணவர்கள் தேசிய கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டனர்.   இதில் திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக சந்தானம் தற்காப்புக் கலை மற்றும் சிலம்பம் அகாடமி மாணவர்கள் 30 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர். இதில் முதல் பரிசு 25 பேர், இரண்டாம் பரிசு 5 பேர் என சந்தானம் சிலம்பம் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றனர் .   இதில் சந்தானம் சிலம்பம் அகாடமி நிறுவனர் ஆசான் ச.சரவணன் அவர்களுக்கு கல்லை கலைக்கூடம் விளையாட்டு வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் வீரவாள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் மகா குரு துரோணாச்சார்யா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசான் ச.சரவணன் மற்றும் கராத்தே K.ராஜசேகர் வாழ்த்துக்களை தெரிவித்து மாணவர்களை பாராட்டி ஊக்குவித்தனர்.  இப்போட்டியில் மாணவி ச.தாருணிகா கட்டா பிரிவில் முதல் பரிசு தேசிய அ...

சோ.கீழ்நாச்சிபட்டு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகளுடன் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம், சோ.கீழ்நாச்சிபட்டு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான முறையில் நடைபெற்றது.  ஆண்டு விழா நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். விடுப்பு எடுக்காமல் 100% பள்ளிக்கு வந்த மாணவர்கள், கலை நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என ஏராளமான மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்து ஊக்குவித்தார்.  ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் உமா மகேஸ்வரி அவர்கள் சிறப்புரையாற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகன்யா, தலைமை ஆசிரியர் சுகுனா, உதவி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஊர் பெரியோர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  பள்ளி மாணவ மாணவிகள் நடனம், நாடகம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.