Skip to main content

Posts

Showing posts from October, 2023

குருமன்ஸ் பழங்குடியின எஸ்.டி ஜாதி சான்றிதழ் வேண்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் பிறப்புரிமை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே குருமன்ஸ் பழங்குடியின சான்று வேண்டி மக்களின் குரல் அறக்கட்டளை மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.வேலு தலைமையில் பிறப்புரிமை மீட்டெடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசன் சிறப்புரையாற்றினார். திருவண்ணாமலை மாவட்ட குருமன்ஸ் பழங்குடியின மக்கள் ஜாதி சான்றிதழ் கேட்டு பலகட்ட போராட்டங்களை நடத்தினர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஜாதி சான்று கலாச்சாரம் ஆய்வு அறிக்கையும் செய்யப்பட்டு வழங்குவதாகவும் அறிவித்தனர்.இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்காமல் காலம் கடத்துவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.   பழங்குடியின மக்களின் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் தெய்வ வழிபாடு உள்ளிட்டவை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு தலையில் தேங்காய் உடைத்து நூதன முறையில் பாட்டு பாடி தங்கள் வழிபாட்டு நெறிமுறைகளை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.  நிறுவனர் மா.சரஸ்வதி ஒருங்கிணைப்பில் முருகேசன், துரைராஜ், நாராயணசாமி, மனோகரன், ரமேஷ், அர்ஜுனன், விஜயராஜ்,...

சந்திரலிங்கம் அருகே குடிநீர் குழாய்கள் மூடப்பட்டிருந்ததால் குடிநீருக்காக அலைமோதிய பக்தர்கள்!

  திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கிரிவலப் பாதை 14 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களுக்கும் இன்று ஒரே நாளில் ஒரே நேரத்தில் அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவண்ணாமலை காஞ்சி சாலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சந்திர லிங்கத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  எனினும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கும் குழாய்கள் மூடப்பட்டு இருந்ததால் குடிநீர் இல்லாத கும்பாபிஷேகமாக அமைந்திடவே பக்தர்கள் குடிநீரை தேடி அலைந்தனர்.  அருகிலுள்ள அருணாச்சலம் மகா அன்னதானமடத்தின் நிறுவனர் அருணாச்சலம் அடியார்கள் அமைத்திருந்த குடிநீர் குழாயில் பக்தர்கள் குடிநீர் பருகினர். கிரிவலம் வரும் பக்தர்கள் குடிநீர் தாகத்தால் அலை மோதாத வகையில் குடிநீர் குழாய்களில் குடிநீர் சப்ளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சாமி தரிசனம்

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், காணலப்பாடி கிராமம் முருகன் மலை மீது எழுந்தருளி ஆட்சி செய்யும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலை கும்பாபிஷேக திருப்பணிகள் தேவதா அனுக்ஞை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், மகா தீபாராதனையுடன் துவங்கியது. பின்னர் நேற்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி,  கும்பலங்காரம், அங்குரார்பணம்,  ரக்ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜை, திரவியாஹூதி, பூர்ணாஹீதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டாவை நடைபெற்றது. இன்று காலை விநாயகர் பூஜை, கோ பூஜை, தத்துவார்ச்சனை, பிரான பிரதிஷ்டை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியார்களால் கலசங்கள் கோயிலை சுற்றி வந்து கோயில் உச்சியில் அமைக்கப்பெற்ற கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது ஆயிரக்க...

ஓரெழுத்தில் தொடங்கும் ஆயுத பூஜை சிறப்பு கவிதை!

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணன் கே.அண்ணாமலை அவர்களின் நல்லாசியுடன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் ஆர்.பாலசுப்பிரமணியம் பிஎஸ்சி அவர்கள் ஆதரவுடன், கவிஞர் அ.தங்கராஜி எம்ஏ, ஒன்றிய தலைவர், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் உயிரெழுத்து ஆ" ஓசை" நெடில் எழுத்தில் ஒரே எழுத்தில் தொடங்கும் ஆயுத பூஜை சிறப்பு கவிதை! ஆயுதத்தை  ஆட்சி செய்யும்  ஆருத்ர நாயகியே!  ஆதியும்  ஆனவளே  ஆணவத்தை அழிப்பவளே!  ஆகாத செயலும்  ஆகுமே! எந்த தொழிலும் ஆத்தா உன் அருளாலே  ஆக்கம் தந்து  ஆள்பவளே யாவரையும்  ஆட்டம் கண்டு  ஆட்டி வைப்பவளே ஆத்திரப்படுவோரும் வீண்  ஆசைப்படுவோரும் ஆணையிடுவோரும்  ஆலயம் தொழாதோர் கர்வம் நீக்கி  ஆர்வம் தந்து களிப்பவளே  ஆறு அறிவுக்கும் அர்த்தமானவளே  ஆறாகப் பெருகும் கல்வி கற்பவற்கு  ஆச்சரியமூட்டும் அறிவர்தனியே  ஆறுமுகனுக்கும் அருள்பவளே  ஆதி சிவனுக்கு கல்விக்கரசியாய் ஆனவளே  ஆதி பரம் பொருளின் அன்னையே  ஆயக்கலைகள் 64ம் அருள்பவளே  ஆகாய கங்கைக்கும் அமிர்தரசியே  ஆனந்தம் தருபவளே  ஆயுதத் ...

சனாதன தர்மம் தழைத்தோங்க வேண்டி மகா ருத்ர யாகம், பாஜக மாவட்டத் தலைவர் விஜயராஜ் தலைமையில் நடைபெற உள்ளது

  பாரதப் பிரதமர் மோடி மீண்டும் அரியணையில் அமரவும், சனாதன தர்மம் தழைத்து ஓங்கவும் வருகிற நவம்பர் 21 முதல் 23 வரை திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் மகா ருத்ர யாகம் பட்டியல் அணி பாஜக மாவட்ட  தலைவர் R.விஜயராஜ் தலைமையில் நடைபெற உள்ளதால் சாதுக்களும் சன்னியாசிகளும் பக்தர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மம் தழைத்தோங்க வேண்டியும், வருகிற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாரத தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பாரதப் பிரதமராக அரியணையில் அமர வேண்டி, உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஆன்மீகத் தளத்தில் அருணாச்சலேஸ்வரர் மகா ருத்ர யாகம் நடைபெற உள்ளது. வருகிற நவம்பர் மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகில் உள்ள கற்பக விநாயகர் கோயில் வளாகத்தில் மகா ருத்ர யாகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாவட்ட தலைவர் R.விஜயராஜ் அவர்கள் தலைமையில் மகா ருத்ர யாகம் நடைபெற உள்ளது. இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் சிறப்பு...