மகான் சிதம்பரம் சட்டி சுவாமிகளின் 65ம் ஆண்டு குருபூஜை விழா முன்னிட்டு 1000 நபர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம்
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் புதூர் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த மகான் சிதம்பரம் சட்டி சுவாமிகளின் மடாலயம் உள்ளது. மகானின் 65ம் ஆண்டு குருபூஜை விழா ஆடி அமாவாசையை முன்னிட்டு அவரது நினைவாக அறநிலையத்துறை, ஊர் பொதுமக்கள் மற்றும் செந்தில்குமார் ஏற்பாட்டில் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குருபூஜை விழா ஏற்பாடுகள் அனைத்தையும் ஊர் பொதுமக்கள் சார்பாக செந்தில்குமார் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அவர் ஜீவசமாதி அடைந்து 103 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 65 ஆம் ஆண்டு குருபூஜை விழா ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று 1000 நபர்களுக்கு சாதம், சாம்பார், வடை, பொரியல், அப்பளம், மோர் உள்ளிட்ட அறுசுவை உணவு அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பாக குருபூஜை விழா நடைபெற்றது. சிதம்பரம் சட்டி சுவாமிகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சுவாமிகள். இப்பகுதியில் மகானாக வாழ்ந்து வந்தார். அவர் ஜீவசமாதி அடைந்த இன்றும் அவர்கள் போற்றி வருவதற்கான காரணங்கள் பல மகிமைகள் உள்ளது. அவர் மிகச்சிறந்த சித்த வைத்தியராக அப்பகுதி மக்களுக்கு சுற்றுவட்டார பொது மக்களுக்கு வைத்தியம் செய்து வந்துள்ளார். அவர் சிகிச்சை அளித்தால் நி...