கிரிவலப் பாதையில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவிக்கும் அருணாச்சலம் மகா அன்னதான மடம்
திருவண்ணாமலை காஞ்சி சாலை, கிரிவலப் பாதையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள், அருணாச்சலம் மகா அண்ணா மடம் என்னும் ஆன்மீக மதத்தை நிறுவி கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணியில் சிறப்பான முறையில் ஈடுபட்டு வருகிறார். கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மாதா மாதம் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசிப்பிணியை போக்கி வருகிறார். திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை ஊராட்சியை சேர்ந்த கே.அருணாச்சலம் அவர்கள் பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அருணாச்சலம் மகா அன்னதான மடம் மற்றும் நாகாத்தம்மன் திருக்கோயில் திருப்பணிகளை சிறப்பான முறையில் தொடர்ந்து அருணாச்சலம் அவர்கள் செய்து வருகிறார். அங்கு பௌர்ணமி தினத்தன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆன்மீகப் பணிகளில் இவர் தொடர்ந்து பல ஆண்டு காலமாக சிறந்து செயல்பட்டு வருகிறார். 1972 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கிரிவலப் பாதையில் கடந்த 50 ...