திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, திருவண்ணாமலை வடக்கு ஒன்றிய ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த கீழ் செட்டிபட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஒன்றிய பொதுச் செயலாளர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தி, அனைத்து கட்சி நிர்வாகிகளும் கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார். புதிய ஒன்றிய தலைவராக செயல்படுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விருப்பம் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டது. அதில் நான்கு பேர் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். நான்கு நபர்களில் அதிக கட்சி உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவராக ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் புதிய பொறுப்பு ஒன்றிய தலைவராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவண்ணாமலை வடக்கு ஒன்றிய தலைவர் பதவிக்கு புதிய பொறுப்பாளர்களாக ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் ஆதித்ய பழனிச்சாமி ஆகிய இருவரும் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் K.R....