Skip to main content

Posts

Showing posts from January, 2026

முதல்வர் அளித்த சம வேலைக்கு சம ஊதியம் வாக்குறுதியை நிறைவேற்றாமல் 16 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை வலியுறுத்தி போராடி வருவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் வேதனை

சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அனுமதியின்றி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் சென்னையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.  போராட்டத்திற்கு திமுக அரசு செவி சாய்க்கவில்லை. எனவே விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டமாக 11 வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடத்தினர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க வட்டார செயலாளர் மணிகண்டன் பேசியபோது, எங்களுடன் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பெறுகின்ற சம்பளத்திற்கு இணையாக அடிப்படை ஊதியம் எங்களுக்கும...

மருத்துவ குல நாதஸ்வர, தவில் கலைஞர்கள் ஸ்ரீ சரஸ்வதிக்கு 22 ஆம் ஆண்டு இசை விழா கோலாகலம்!

  திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ குல நாதஸ்வர, தவில் கலைஞர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் ஸ்ரீ சரஸ்வதிக்கு 22 ஆம் ஆண்டு இசை விழா நடைபெற்றது.  இந்த இசை விழா உலக மக்கள் நன்மைக்காக மாபெரும் இசை விழாவாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட நாதஸ்வர, தவில் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அருள்மிகு அண்ணாமலையாருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ சரஸ்வதி அம்பாளுக்கு இசை ஆராதனையுடன் 108 நாதஸ்வர, தவில் கலைஞர்களால் இசையுடன் ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் மாடவீதி ஊர்வலம் நடைபெற்றது.  பின்னர் அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் திருக்கோயில். 16 கால் மண்டபம் அருகில் திருவண்ணாமலை இசை பள்ளி மாணவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி, பரதநாட்டிய மாணவிகள் நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட சிறப்பு கச்சேரிகள் நடைபெற்றது.  இந்த இசை விழா ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட இசை கலைஞர்களால் நடத்தப்படும் விழாவாகும். இதில் சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.  சங்கத்த...