Skip to main content

Posts

Showing posts from May, 2025

3ம் ஆண்டு குடும்ப விழாவில் வறுமையில் வாடும் குடும்பத்திற்கு தையல் மெஷின் வழங்கி அமைதியாக சாதித்து வரும் சாதிக்க பிறந்த மருத்துவர் உதவும் கரங்கள் அறக்கட்டளை

  திருவண்ணாமலை நகரில் அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதிக்க பிறந்த மருத்துவர் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் சார்பில் மூன்றாம் ஆண்டு குடும்ப விழா கடந்த இரண்டு நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிஸ்கோ கே.ரவி, ஏ.சிவா ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். எ.ரத்னா செந்தில்குமார், பி.சண்முகசுந்தரம், வி.மணிவண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முன்னாள் உதவி ஆய்வாளர் எம்.குப்புசாமி, ஜி.பூபதி, என்.மாரிமுத்து ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். வேதா மகேந்திரன், பிஎஸ்என்எல் ஓய்வு எஸ்.செல்லதுரை, வி.சுப்பிரமணியன், எஸ்.ராம்குமார், ஏ டி எஸ் செல்வம், ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். தலைவர் மகாராஜன், என்.விஸ்வநாதன், சிறுகவிஞர் கே.காளிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் ஜி.காசிமணி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் ஏ.கலைவாணி, ஜி.செல்வவிநாயகம், செயலாளர் எம்.ராஜேந்திரன், பேராசிரியர் சி.மெர்லின் சந்திரன், ஜி.தமிழ் முருகன், எம்.சார்லி சந்திரன் உள்ளிட்ட சிறப்பு பேச்சாளர்கள் அறக்கட்டளையின் வளர்ச்சி, கல்வியின் முக்கியத்துவம் ...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.