Skip to main content

Posts

Showing posts from April, 2022

அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

  திருவண்ணாமலை ரவுண்டானா அருகே திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் விஜயராஜ் தலைமையில் அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பாஜகவினர் சட்ட மாமேதை அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர். சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை ரவுண்டானா அருகே அண்ணல் அம்பேத்கர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் மலர்தூவி அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.  இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ்குமார், நகர தலைவர் திருமாறன், நகர பொதுச் செயலாளர் செந்தில்வேல், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி முன்னாள் தலைவர் மலர்க...

கோயில் கும்பாபிஷேக திருவிழாவின்போது பாஜக சார்பில் 600க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம்.

திருவண்ணாமலை மாவட்டம், கோவூர் கிராமத்தில் நடைபெற்ற வினாயகர் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக பொதுச்செயலாளர் தங்கராஜ் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய தலைவர் குமாரராஜா கலந்துகொண்டு 600க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். திருவண்ணாமலை மாவட்டம், கோவூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பிள்ளையார் மற்றும் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.  திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பாக கோவூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள வினாயகர் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிசேக திருவிழாவின் போது 600க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ஒன்றிய பாஜக பொதுச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.  மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் குமாரராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஒன்றிய துணைத் தலைவர்கள்...