உலகப் புகழ் பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை மகா தீப திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் சங்கம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் அலுவலகம் திறப்பு விழா எடப்பாளையம் பைபாஸ் கார்னரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நலச்சங்கம் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களின் பாதுகாவலர் பாசமிகு அகில இந்திய தலைவர் விருகை டாக்டர் வி.என்.கண்ணன் திருவண்ணாமலை மாநகரில் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாநகர துணை தலைவர் டி.செந்தில்குமார் அறக்கட்டளை வளர்ச்சிக்காக ரூ.10,000 நிதி உதவியை அகில இந்திய தலைவரிடம் வழங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.சீனிவாசன் சுந்தரம், மாவட்ட செயலாளர் வி எம் பாபு, மாவட்ட பொருளாளர் பி.சங்கர்கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மத்திய மாவட்ட தலைவர் அகத்தியன், வடக்கு மாவட்ட தலைவர் காழியூ...