திருவண்ணாமலை மாவட்டம், கீழ்செட்டிப்பட்டு கிராமம், பாஞ்சாலி நகரில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் அருள்மிகு வரசித்தி செல்வ சிங்கார கணபதி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்வினை கண்டு களித்து ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர். முன்னதாக நேற்று மகா கணபதி ஹோமம், அனுக்ஞை, யாகசாலை பிரவேசம், கோபுர கலசங்கள் நிறுவுதல், முதற்கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கியது. இன்று காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு விசேஷ ஹோமங்கள், சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு வரசித்தி செல்வ சிங்கார கணபதி ஆலய விமான ஸ்தூபி, மூலவர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அருள்மிகு வரசித்தி செல்வ சிங்...