10 அடி பள்ளம் தோண்டி பே கோபுரம் மற்றும் மதில் சுவர்களின் உறுதித்தன்மையை பாதிக்கும் வகையில் நகராட்சி பணிகள், மாற்று இடத்தில் பணிகளைத் தொடர பாஜகவினர் கோரிக்கை மனு.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பே கோபுரம் மதில் சுவர் மற்றும் கோபுரத்தின் உறுதித் தன்மையை பாதிக்கும் வகையில் 10 அடி ஆழம் பள்ளம் தோண்டுவதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் நகராட்சி பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான பாஜகவினர் இணைந்து மனு அளித்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய மலையை சிவனாக வணங்கக்கூடிய உலகப் புகழ் பெற்ற அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மேற்கில் உள்ள பே கோபுரம், அதையொட்டி உள்ள மதில் சுவர்களை சேதப் படுத்தும் வகையில் கனரக இயந்திரங்களை வைத்து 10 அடிக்கு மேல் ஆழமாக பள்ளம் எடுத்த விடியா அரசின் நகரசபையின் பணிகளை பொது மக்களின் சக்தியை திரட்டி முற்றுகையிட்டு கோயிலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் பணிகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நிறுத்தப்பட்டது. நிறுத்திய பின்னர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து திருவண்ணாமலை நகராட்சியின் கோயில் பாதிப்பு பணிகளை இப்போது செய்ய உத்தேசித்துள்ள இடத்திற்க்கு எதிர்புறம் செய்ய வேண்டும் என்று ...