மேல்மருவத்தூர் செல்லும் ஆதிபராசக்தி பக்தர்களுக்கு பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் அருணாச்சலம் அடியார்கள் அன்னதானம் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வாழ்க வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் 50-க்கும் மேற்பட்ட ஆதிபராசக்தி மாலை அணிந்த பெண் பக்தர்கள் மேல்மருவத்திற்கு செல்வதற்காக பூஜை செய்தனர். கடந்த 15 ஆண்டுகளாக வாழ்க வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் இருந்து மேல்மருவத்தூர் தவ பீடத்திற்கு இந்த பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த வருடமும் இன்று தவபீட தவமணி அம்மாள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சக்தி அம்மா பக்தர்கள் இருமுடி கட்டி பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அன்னதானத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வழங்கியவர் ஸ்ரீ அருணாச்சலம் அன்னதானம் மடத்தின் நிறுவனரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் அருணாச்சலம் அடியார்கள் ஆவார். கோயிலில் பூஜை செய்த பக்தர்களுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் அருணாச்சலம் அடியார்கள் கோயில் அருகிலேயே உணவு சமைத்து பூஜைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவர்களை ...