திருவண்ணாமலை மாவட்டம், நூக்காம்பாடி கிராமத்தில் மாவட்ட துணைத்தலைவர் M.முருகன் முன்னிலையில், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் K.M.குமாரராஜா தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் K.வீரப்பன் ஏற்பாட்டில் மாற்று கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலம் அடுத்த நூக்காம்பாடி கிராமத்தில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட மாற்று கட்சிகளிலிருந்து 30க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் K.M.குமாரராஜா தலைமையில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட துணைத்தலைவர் M.முருகன் முன்னிலையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் K.வீரப்பன் ஏற்பாட்டில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜகவில் புதிதாக இணைந்த மாற்று கட்சியினருக்கு காவி துண்டு அணிவித்து மாவட்ட துணை தலைவர் M.முருகன் வரவேற்பு அளித்தார். மேலும் உங்கள் பகுதியில் பாஜகவின் தூதுவர்களாக இருந்து சிறப்பாக செயல்படுமாறு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ...