திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் இருசக்கர வாகன மெக்கானிக் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், மெக்கானிக் சங்கம் சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட கே.கே.எலக்ட்ரானிக் பைக் (இ-பைக்) ஷோரூமில் இருசக்கர வாகன மெக்கானிக் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தொப்பளான், தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் மாவட்ட தலைவர் க.சா.முருகன் , தொகுதி தலைவர் மின்னல் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருசக்கர மெக்கானிக் சங்கத்தின் நிர்வாகிகள் சரவணன் , குமார் ,ஏழுமலை ,பரசுராமன், ரஞ்சித் மற்றும் ஷோரூம் உரிமையாளர்கள் மணி,கதிரழகன் உள்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். அப்போது இருச்சக்கர வாகன மெக்கானிக் சங்கம் சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.