நல்லாட்சி தினமான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளில் பாஜக கொடியேற்றி இலவச மருத்துவ முகாம் நடத்திய மருத்துவர் அணி மாவட்ட தலைவர் ராஜா ஹரிகோவிந்தன்.
திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு தீபமலை மருத்துவமனையில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை பாஜக கொடியேற்றி, இலவச மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவ அணித் தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன். முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் நல்லாட்சி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவர் அணி மற்றும் தீப மலை ஆன்மிகத் தொண்டு இயக்கம் இணைந்து பாஜக கொடியேற்று விழா மற்றும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு கிளையில் பாஜக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை அடுத்து மருத்துவ முகாம் திருவண்ணாமலை வடஆண்டாபட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள தீபமலை மருத்துவமனை மருந்தகத்தில் நடைபெற்றது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, உடல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற...