அதிமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு, குளிர்பானம் மற்றும் பழ வகைகளை அள்ளிச் சென்ற பொதுமக்கள்
திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு புறவழிச்சாலை சந்திப்பில் பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானம், இளநீர் மற்றும் பழவகைகள் ஆகியவற்றை மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களுக்கு வழங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் ஏற்பாட்டில் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலனடையும் வகையில் நீர் மோர், தர்பூசணி, குளிர் பானம் மற்றும் பழ வகைகள் உள்ளிட்டவற்றை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு இளநீர்,தர்பூசணி, குளிர்பானம், நீர்மோர், பழ வகைகள் உள்ளிட்டவற்றை பெற்றுச்சென்று பருகி தாகம் தீர்த்தனர், கோடை வெயிலின் தாக்கத்தையும் தணித்துக் கொண்டனர். இளநீர்,குளிர்பானம், பழ வகைகளுடன் நீர்மோர் பந்தல் திறந்து கோடை வெயிலின் தாக்கத்தை தனித்து, தாகத்தை போக்கிய வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவரும், வழக்கறிஞான வழக்கறிஞருமான P.மோகன் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.