திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் மாவட்ட தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி மாநில தலைவர் உமா ரதிராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல தலைவிகள் ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள உண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவர் சந்திரா இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட பொது செயலாளர் கௌதமி நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பாஜக மகளிர் அணி தலைவர் உமா ரதிராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சியை சிறப்பாக செயல்படுத்துமாறு மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பாஜக மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ், மகளிர் அணி வேலூர் கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ண சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜதமயந்தி,மாவட்ட...